புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (09:23 IST)

நீங்க வந்தா போராடுவோம்! - அசாம் பயணத்தை தவிர்த்த மோடி!

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் அசாம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுகள் அசாமில் உள்ள கவுஹாத்தியில் 10ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விளையாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அசாமி போராட்டம் நடத்தி வருபவர்கள் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் பிரதமர் அசாம் வந்தால் போராட்டக்காரர்களால் கலவரம் வெடிக்கலாம் என கருதப்பட்டதால் பிரதமர் மோடியின் அசாம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அசாம் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.