புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (17:28 IST)

சென்னை-விளாடிவோஸ்டோக் இடையே கப்பல் போக்குவரத்து -பிரதமர் மோடி

இன்று அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் “இந்தியாவும் சரி, ரஷ்யாவும் சரி, தங்கள் நாட்டு உள்விவகாரங்களுக்குள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே நல்லதொரு உறவுநிலை நீடித்து வருகிறது.

நான் 2001 வருடாந்திர உச்சி மாநாட்டின்போது வாஜ்பாயுடன் இங்கு வந்திருந்தது எனது நினைவுக்கு வருகிறது. அப்போது நான் குஜராத் முதலமைச்சராக இருந்தேன்” என கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார் மோடி. அதிபர் புதி மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதில் சென்னை துறைமுகத்திலிருந்து ரஷ்யாவின் விளாடிவோச்டோக் துறைமுகம் வரை சரக்கு கப்பல்களை இயக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.