குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 17ம் தேதி நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள குடியரசு தலைவரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. எனவே, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, இந்த தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல், இந்த தேர்தலின் போது ரகசிய வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.