1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:04 IST)

தமிழக நிலுவைத் தொகை என்னாச்சு? – பிரதமரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பலவற்றிற்கு ஆளுனரின் ஒப்புதல் அளிக்கப்படாத நிலை உள்ளது. மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து பேச முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

அங்கு நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீடிப்பது, மத்திய அரசின் மின்சார சட்ட திருத்தம், நீட் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னர் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை நேரில் சந்தித்து குடியரசு தலைவரானதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.