வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (16:43 IST)

இதை செய்யாவிட்டால் பாஜக எளிதில் வெற்றி பெற்றுவிடும்: மக்களவை தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர்..!

வரும் மக்களவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் இல்லை எனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற்று விடும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பலருக்கு எழும்பியுள்ளது. 
 
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தல் குறித்து கூறிய போது ’கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாஜக பலவீனமாக உள்ளது. ஆனால் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப ஹிந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா போன்ற வலுவான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தேவை. 
 
பாஜகவுடன் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும். இல்லை எனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று  கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்காக 30 சதவீதம் தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran