9 ஆண்டுகால பாஜக ஆட்சியே பேரிடர்தான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்பு பணிகளுக்காக, முதல்வர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு இ உரிய மரியாதை கொடுக்கிறோம். அரசியலில் முன்னுக்கு வர நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. இதைக் காழ்புணர்வுடன் கூறவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தீல் இடமில்லை என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மரியாதை தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே!என்று தெரிவித்திருந்தார்.
இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியளித்துள்ளதாவது: 9 வருட ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதனால் இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்க மாட்டோம் என்ற எண்ணத்தில் கூறியிருப்பார்கள். என சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.