1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:35 IST)

உருவாகிறதா காங்கிரஸ் 2.0? பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா! – யோசனையில் சோனியா காந்தி!

இந்தியாவில் காங்கிரஸ் தனது செல்வாக்கை கிட்டத்தட்ட இழந்துள்ள நிலையில் புதிய வியூகங்களுடன் பிரசாந்த் கிஷோர் களமிறங்கியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது தன் செல்வாக்கை பெரிதும் இழந்துள்ளது. தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து தோல்வி முகம் கண்டு வரும் காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியை தழுவியது. தற்போது இந்தியாவில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸின் பெரும் ஐகானாக பாரக்கப்பட்ட ராகுல்காந்தியும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை காட்டி தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து காங்கிரஸ் சரியான திசையின்றி பயணித்து வருகிறது. தற்போது சோனியா காந்தி தற்காலிக தலைவராக இருந்தாலும் கட்சியை மேம்படுத்துவதற்கான பெரிய நடவடிக்கைகள் எதும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் புதிய ஐடியாக்களோடு களம் இறங்கியுள்ளார் அரசியல் வியூகி பிரசாந்த் கிஷோர். கடந்த 3 நாட்களாக சோனியா காந்தியை சந்தித்து பேசி வரும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புட்டு புட்டு வைத்துள்ளாராம்.
Prashant Kishore says thanks to Delhi people

இதுகுறித்து தனி குழு அமைத்து ஆராய சோனியா காந்தி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல்களை தீர்க்க தான் உதவுவதாகவும் அதற்கு தனக்கு காங்கிரஸில் குறிப்பிட்ட ஒரு பதவியை அளிக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் டீல் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.