செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (14:02 IST)

சமூக ஊடகங்கள் தடை செய்ய வேண்டும்: சோனியா காந்தி

இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சோனியா காந்தி பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்
 
அவர் இது குறித்து மேலும் பேசியதாவது: இளைஞர்கள் சிந்தனையில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் பரப்புவதாகவும் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்துவதை தடை வேண்டும் என்றும் கூறினார்
 
2019 தேர்தலின்போது ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்தது செய்தது என்றும் சோனியா காந்தி புகார் அளித்துள்ளார்
 
போலி விளம்பரங்கள் செய்தி நிறுவனங்கள் தரும் செய்திகள் போல பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு ஏற்றுகின்றனர் என்றும் இது ஆபத்தானது என்றும் சோனியா காந்தி உள்ளார்