1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (20:00 IST)

காங்., தலைவராக சோனியா தொடர கட்சியினர் விருப்பம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடர கட்சியினர் ஒருமனதாக முடிவு செய்திருப்பதாகவும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியை நீடிப்பார் என்று அறிவிப்பு மூத்த தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது