1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (17:20 IST)

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

Prakash Raj
கடந்த சில நாட்களாக திருப்பதி லட்டு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்த தகவலும் வெளியாகியுள்ளன.
 
திருப்பதியில் லட்டு விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதில் அளித்த பவன் கல்யாண், “சனாதனம் பேசுபவர்களிடம் இப்படிப் பேசுபவர்கள் அல்லா, ஜீசஸ் குறித்து பேச முடியுமா?" என்று கூறினார்.
 
சனாதனம் குறித்து இனிமேல் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், நான் சும்மா இருக்க மாட்டேன் என்று பவன் கல்யாண் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், "திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.
 
நான் தற்போது வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கிறேன். லட்டு சர்ச்சை விவகாரம் குறித்து திரும்பி வந்ததும் பதில் அளிக்கிறேன். நான் திரும்புவதற்குள் எனது சமூக வலைதள பதிவை புரிந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran