ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:54 IST)

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000.. நாளை முதல் அளிக்க அரசு முடிவு..!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் இல்லத்தரசிகளுக்கு 2000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. 
 
இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனே கார்கே, கர்நாடக முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.  
 
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்குவோம் என கர்நாடக மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது 
 
இந்த நிலையில் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாளை முதல் இல்லத்தரசிகளுக்கு இரண்டு ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மைசூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மொத்தம் 1.1 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை கர்நாடக அரசு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran