1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!
1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கை!
மின்சார கட்டணம் செலுத்தாததால் ஆயிரத்து 500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 1500 பள்ளிகளில் மின் கட்டணம் பாக்கி தொகையை செலுத்தவில்லை என்றும் இதனை அடுத்து பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மின்சார துறை தெரிவித்துள்ளது
மொத்தம் 1549 பள்ளிகளில் நாற்பத்தி ஒன்பது லட்ச ரூபாய்க்கு மேல் மின் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது என்றும் ஏற்கனவே பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது