புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (14:58 IST)

தபால்துறை தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
இந்தி ஆங்கிலத்தில் மட்டும் தபால்துறை தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிலையில் மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டது
 
இதுகுறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சற்றுமுன் மாநிலங்களவையில் அறிவித்தார். 
 
தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.