வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (09:24 IST)

காட்டுமிராண்டிகளான போலீஸ்?? டிரெண்டாகும் #PoliceBrutality!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #PoliceBrutality என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மும்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தால் மக்கள் இதன் அவசியத்தை உணராமல் வெளியே சென்று வருகின்றனர். 
நாட்டின் பல பகுதிகளில் தேவையே இல்லாமல் பலர் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை போலீஸார், வெளுத்து கட்டி எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு கோரி வருகின்றனர். பெரும்பாலும் எச்சரிக்கை மற்றும் தோப்புகரனம் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு லத்தியில் அடியும் கிடைக்கிறது. 
 
போலீஸார் இப்படி மக்களை அடிப்பதால் #PoliceBrutality என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு போலீஸார் சாலையில் செல்வோர்களை அடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். போலீஸார் இப்படி அடிப்பது தவறு என கூறப்பட்டாலும், மக்கள் தேவையற்று வெளியே செல்வதும் தவறு தானே...