வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:31 IST)

லாலாபேட்டை காவல் நிலையத்தில் மருத்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!

lalapettai
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில்,  மருந்தககளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
 

தமிழகத்தில் பல மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சில இளைஞர்கள் ஆன்லைனில் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்களின்படியும், யூடியூப் வீடியோக்கள் பார்த்து  சில மருத்துகளை தவறான வழியில் பயன்படுத்தும் சூழல் உள்ளது. 

இந்த நிலையில்   லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையில் லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருந்தகங்களின் உரிமையாளர்களை அழைத்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.