வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (18:40 IST)

நாய்க்கு விஷம் கொடுத்து சோதித்த ஜாலி?! – தொடர் கொலைகளின் பிண்ணனி

கேரளாவில் தனது உறவினர்களை தொடர்ச்சியாக கொலை செய்த ஜாலி குறித்து மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாலி தாமஸ். இவர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை சூப்பில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது.

கேரள போலீஸால் கைது செய்யப்பட்ட ஜாலியிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் முதன்முதலில் ஜாலி சூப்பில் சயனைடு கலந்து தனது நாய்க்கு கொடுத்து சோதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாய்க்கு வெறிபிடித்ததால் கொல்வதற்காக அப்படி செய்ததாக ஜாலி கூறியிருந்தாலும் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம்.

ஜாலியின் தொடர் கொலை சம்பவங்களுக்கு ஆரம்பமாக நாய்க்கு விஷம் வைத்த சம்பவம் இருக்கலாம் என போலீஸ் கருதுவதால் நாய் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.