வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (09:32 IST)

காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா பாண்டே கணவருடன் கைது

கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவே மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை அனுசரித்து கொண்டிருந்தபோது, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் அருகே உள்ள நவ்ரங்காபாத்தில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மகாத்மா காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவ்ர் அசோக் பாண்டேவையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் 11 பேர்களும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.