ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (16:13 IST)

பிரதமர் மோடியின் சிறு தானிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை

பிரதமர் மோடியின்  சிறு தானிய   பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் இசை ஆல்பம், பாடல் ஆகியவற்றிக்கு வழங்கப்படும் பிரபலமான இசை விருதுகளில் ஒன்று கிராமி விருது.

சினிமாவில் ஆஸ்கர் விருது வழங்கப்படுவது நடிகர்களுக்கு பெருமை சேர்ப்பது போன்று இசைக் கலைஞர்களுக்கு கிராமி விருது கருதப்படுகிறது.

ஆண்டு தோறும் இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடியின் உரையை உள்ளடக்கிய அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ் என்ற பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

66வது கிராமி விருதுக்கு இப்பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இவ்விழா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.