1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:53 IST)

நல்ல வார்த்தை சொன்னதுக்கு நன்றிகள் பில்கேட்ஸ் ஜீ! – பிரதமர் மோடி நன்றி ட்வீட்!

பிரதமர் மோடி அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்திற்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் “ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை தொடங்கியுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பது விரைவுப்படுத்தப்படும் என்பது ஆரோக்கியமான விஷயம்” என தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸின் இந்த ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி “ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் குறித்த நல்ல கருத்துகளை சொன்ன பில்கேட்ஸ்க்கு நன்றி. இது இந்தியாவில் இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஊக்கமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.