அந்த மோடி நியூஸை நாங்க போடவே இல்ல.. போலி அது..! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்!
பிரதமர் மோடி பற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளதாக பரவி வரும் படம் போலியானது என நியூயார்க் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு குவாட் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசி பின்னர் நாடு திரும்பினார். பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியானதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பிரதமர் மோடி படத்துடன் ”உலகின் கடைசி சிறந்த நம்பிக்கை. உலகத்தால் விரும்பப்படும் சக்திவாய்ந்த தலைவர் எங்களை வாழ்த்த வந்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரவி வரும் இந்த படம் குறித்து விளக்கமளித்துள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அந்த படம் முழுக்க முழுக்க வேறு யாரோ போலியாக டிசைன் செய்து வெளியிட்டுள்ளதாகவும், நியூயார்க் டைம்ஸில் இப்படியான செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.