வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:11 IST)

மீண்டும் கொரோனா எப்போதும் தோன்றும் என்று தெரியாது: பிரதமர் மோடி

Modi
மீண்டும் கொரோனா எப்போது தோன்றும் என்று யாருக்கும் தெரியாது என்றும் அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார் 
 
கொரோனா வைரஸ் ஒரு பெரிய நெருக்கடி என்றும் அது முடிந்துவிட்டது என்று நாங்கள் கருதவில்லை என்றும் பிரதமர் மோடி இன்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் 
 
இப்போது கொரோனா ஒரு இடைவெளி எடுத்திருக்கலாம் என்றும் ஆனால் மீண்டும் எப்போது தோன்றும் என்று எங்களுக்கு தெரியாது என்றும் எனவே பொது மக்கள் முக கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்