வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (07:17 IST)

தமிழ்நாட்டை தாண்டினால் திமுகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது: பிரதமர் மோடி விமர்சனம்

PM Modi
தமிழ்நாட்டைத் தாண்டினால் திமுகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்றும் டெல்லி பஞ்சாபை தாண்டினால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாக்குகள் கூட கிடைக்காது என்றும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  
 
நேற்று 20 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் கூடியது என்பதும் இந்தியா என்று அந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
பாஜகவுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணி இணைந்துள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து விமர்சனம் செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டை தாண்டினால் திமுகவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்றும் பஞ்சாப் மற்றும் டெல்லியை தாண்டினால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது என்றும் தெரிவித்தார்.  
 
நாடு கடுமையான சூழலிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் அதை மீட்டெடுக்க பாடுபட்டது என்றும் மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என்று எங்கள் கூட்டணி பாடுபடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  
 
Edited by Siva