திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:32 IST)

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து.. தேர்தலும் நடத்தப்படும்: பிரதமர் மோடி வாக்குறுதி..!

Modi
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்ரீ நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். 
 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து உள்ளார் 
 
இது தொடர்பாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய போது ’புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்க நான் மும்முரமாக இருக்க வேண்டும் என்றும் விரைவில் இங்கே சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என்றும் இதன் மூலம் காஷ்மீர் மக்களின் கனவுகள் நினைவாகும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
பல தலைமுறைகளாக பயங்கரவாதம், பிரிவினைவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை காரணமாக காஷ்மீரில் மக்கள் அச்சமாக இருந்த நிலையில் தற்போது அச்சமின்றி மக்கள் நடமாடும் நிலை உள்ளதாகவும் அதனால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார் 
 
மேலும் இங்கு உள்ள வைஷ்ணவா தேவி, அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் இப்போது அச்சம் இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். பாஜக ஆட்சியில் தான் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran