திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (14:45 IST)

அரசியல் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் சேவை! வரலாறு படைத்த பிரதமர் மோடி!

இந்தியாவின் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று சேவை செய்து வரும் நரேந்திரமோடி அரசியல் தலைவராக இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பதவியேற்று செயல்பட்டு வரும் பிரதமர் மோடி கடந்த 2001ம் ஆண்டு இதே அக்டோபர் 7ம் தேதி அன்று முதன்முதலாக குஜராத் முதல்வராக பதவியேற்றார். அது தொடங்கி 2001, 2007, 2012 என மூன்று முறையும் குஜராத் முதல்வராக தொடர்ந்தார். 2014ல் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி 2019ம் ஆண்டிலும் இரண்டாவதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத் முதல்வராக தொடர்ந்து 15 ஆண்டுகள், பிரதமராக 5 ஆண்டுகள் என பிரதமர் மோடி அரசியல் தலைவராக 19 ஆண்டுகளை முடித்து 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து வருகின்றனர்.