ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? மோடி - அமித் ஷா மீட்டிங்!
நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் அமித் ஷா மோடி திடீர் சந்திப்பு.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபடியில்லை. நாள் தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் 31 ஆம் தேதி 4 வது கட்ட ஊரடங்கு முடியவுள்ளன நிலையில் பொது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா பாதிப்பு காரணமாக 4 வது கட்ட பொதுமுடக்கம் குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், அமித் ஷா இன்று பிரதமர் மோடியை சந்தித்து, மே 31 ஆம் தேதிக்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து மோடி ஆலோசித்து முடிவெடுப்பார் என தெரிகிறது,