1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (07:56 IST)

பேடிஎம் கணக்கில் இருந்த ரூ.47 ஆயிரம் திடீர் மாயம்: ஹேக்கர்கள் கைவரிசையா?

தனது பேடிஎம் கணக்கில் இருந்த 47 ஆயிரம் ரூபாய் திடீரென மாயமாகி விட்டதாக சென்னையை சேர்ந்த ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த 35 வயது ரவிக்குமார் என்பவர் பேடிஎம் செயலியை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது பேடிஎம் கணக்கில் இருந்து ரூபாய் 47 ஆயிரத்து 705 காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் 
 
இது குறித்து அவர் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து நேரிலும் சென்று அவர் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பேடிஎம் கணக்கில் 47,705 ரூபாய் இருந்தது உண்மைதான் என்றும் அவர் எந்தவிதமான பண பரிமாற்றமும் செய்யாத நிலையில் அந்த பணம் மாயமாகி உள்ளது என்பதையும் கண்டுபிடித்தனர்
 
இதனை அடுத்து இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேடிஎம் நிறுவனத்திடம் விசாரணை செய்ய முடிவு செய்தனர். பேடிஎம் கணக்கில் வைத்திருந்த 47 ஆயிரம் பணம் திடீரென மாயமானதால் பேடிஎம் பயன்பாட்டாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது