திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (23:55 IST)

சோறு சாப்பிடாமல், நீர் அருந்தாமல் பப்ஜி கேம் விளையாடி ...உயிரிழந்த சிறுவன் !

கொரொனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லைனில் வீடயோ கேம், பப்ஜி கேம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் (16 ). பல நாட்களாகச் சாப்பிடாமல் பப்ஜி கேம் மட்டுமே விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டான்.

இதனால் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக சிறுவன் தாக்கத்துக்கு நீர் அருந்தாமல்,   சாப்பிடாமல் இருந்ததால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.   அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.