புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (12:42 IST)

பயணிக்கு கொரோனா? விமானத்திலிருந்து குதித்த விமானி!

டெல்லி சென்ற உள்ளூர் விமானம் ஒன்றில் பயணிக்கு கொரோனா இருப்பதாக விமானி காக்பிட் வழியாக குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவிலிருந்து டெல்லி சென்ற ஏர் ஆசியா விமானம் ஒன்றில் பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பயணி முன் இருக்கையில் அமர்ந்திருந்ததால் பயணிகள் பின்பக்க கதவு வழியாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் காக்பிட்டில் இருந்த விமானி முன்கதவு வழியாக வெளியேற வேண்டிய நெருக்கடி. ஆனால் அவர் முன்கதவு வழியாக வெளியேறாமல் காக்பிட் அவசர கதவு வழியாக விமானத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

பிறகு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.