1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (13:47 IST)

தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் ரகசியம் என்ன? புகைப்படங்கள் வெளியீடு!

தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 
14 வது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்த தன் மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய பேரரசர் ஹாஜஹான் எழுப்பிய கல்லறை தான் தாஜ்மஹால். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. 
 
அதிசயிக்கும் வகையிலான இந்த நினைவுச்சின்னம் செங்கற்கள் மற்றும் சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டது. சிக்கலான வலைப்பின்னல் அலங்காரத்திற்கு பெயர்பெற்ற தாஜ்மஹால், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக உள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலை கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜ பிரச்னையை எழுப்பி வருகிறது. இக்கோயிலில் இருந்த சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளூபடி செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தாஜ்மகாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆம், இந்திய தொல்லியல் துறை தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.