1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (15:02 IST)

ஒரு முட்டையில்தான் இந்த பிரபஞ்சம் - முட்டையை சுற்றியுள்ள ரகசியங்கள்!

இங்கே மேலே உள்ள படம் முட்டை என்பது உங்களுக்கு தெரியும். ஏனெனில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனித வாழ்வுக்கு முக்கியமாக இருப்பது முட்டைகளே.
 
உண்மையில், நீங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். இது ஒரு முட்டை தானே என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால், அதன் கால்சியம் கார்பனேட் ஓட்டை நீங்கள் உற்று நோக்க தயாராக இருந்தால், பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணுயிரை நீங்கள் காண்பீர்கள். என்ன? இது நம்பும்படியாக இல்லையா?
 
முட்டையை சுற்றியுள்ள கதைகள்
சரி.. நாம் ஆதிக்காலத்தில் இருந்து தொடங்கலாம். பல மதங்கள், பல மரபுகள், பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் அனைவரும் தங்கள் கதைகளின் முக்கிய புள்ளியாக முட்டைகளைக் கொண்டுள்ளனர்.
 
தெற்கு கலிபோர்னியாவில், காஹுய்லா ( Cahuilla) என்ற மக்கள் உருவாக்கிய கதையில், இந்த முழு பிரபஞ்சத்தின் உருவாக்கத்தையும், முட்டை உடைவதையும் ஒப்பிடுகிறது. இன்னும் கிழக்கு பகுதிக்கு போனால், நெப்ராஸ்கா மற்றும் அயோவாவின் ஒமாஹா பழங்குடியினர் கதைகளில், ஒரு முட்டையை உலகப் பெருங்கடல்களில் விடப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது.
 
அது ஒரு பறவை பாம்பினால் (Bird serpent) பாதுகாக்கப்பட்டு, அந்த முட்டையின் உள்ளே இன்னும் பிறக்காத தாய்மார்களும், தந்தையர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர் என்ற ஒரு கதை உண்டு. ஆனால் இவையெல்லாம் கதைகள்.
 
அறிவியல் என்ன கூறுகிறது?
2006 ஆம் ஆண்டில், நாசாவின் வில்கின்சன் செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு ஒன்று, இந்த பிரபஞ்சம் ஒரு நீள்வட்டமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. அதாவது முட்டை வடிவத்தில் இருக்கலாம்.
 
அறிவியல் ரீதியாக இந்தக் கோட்பாட்டை திட்டவட்டமாக நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியவில்லை. ஆனால் நாம் அனைவரும் ஒரு பெரிய, எப்போதும் விரிவடையும் முட்டைக்குள் வாழ்கிறோம் என்பது சாத்தியமாக இருக்கலாம்.
 
கடந்த 1609 ஆம் ஆண்டில், கணிதவியலாளர் ஜோஹன்னஸ் கெப்லர், பூமி உட்பட நமது கிரகங்கள், சூரியனைச் சுற்றி வருவது ஒரு சரியான வட்டத்தில் இல்லாமல், நீள்வட்ட சுற்றுபாதையில் சுற்றி வருகிறது என்று உறுதிப்படுத்தினார்.
 
ஒரு முட்டையின் ஓடு என்பது சந்திரனின் மேற்பரப்பைப் போன்றது. மணல் போன்ற மேலமைப்பு கொண்ட ஒரு முட்டை ஓட்டில் 17,000 சிறிய பள்ளங்கள் வரை இருக்கும்.
 
இது காற்று மற்றும் ஈரப்பதத்தை அதன் வழியாக செல்ல அனுமதிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க வடிவம், இது உண்மையான பிரபஞ்சத்தின் வடிவம் இருப்பதற்கான சாத்தியங்கள் மட்டுமல்ல, கட்டடக்கலை வடிவமைப்பின் அடிப்படையாகவும் உள்ளது.
 
ஆனால் இயற்கையின் சரியான ஏரோடைனமிக் வடிவமைப்பை எவ்வாறு பிரதியெடுப்பது? ஒரு முட்டையின் வடிவத்தில் ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை.
 
20 ஆம் நூற்றாண்டு வரை கட்டடக் கலைஞர்கள் முட்டை போன்ற கட்டட அமைப்புகளை பெரிய அளவில் உருவாக்கத் தொடங்கினர். பெய்ஜிங்கில் உள்ள 'தி எக்' ( The Egg) கட்டடத்தில் மூன்று அரங்குகளில் 5,452 பேர் அமரக்கூடியது. அது 1,000 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவில் உள்ளது.
 
முட்டையும் மனித வாழ்வும்
 
ஒரு முட்டையின் புரதமானது மனித திசுக்களை உருவாக்க தேவையான அமினோ அமிலங்களின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. இது தாய் பாலுக்கு அடுத்தபடியான நன்மைகளை நமக்கு அளிக்கக்கூடியது.
 
ஐரோப்பாவின் மத்திய காலத்தில், முட்டைகளை பிரகாசமான வண்ணங்களால் அலங்கரிப்பதன் மூலம் மக்கள் வசந்த காலத்தை வரவேற்றனர். ஆனால் ஜான் கேட்பரி தனது முதல் சாக்லேட் முட்டையை 1875 வரை தயாரிக்கவில்லை. இப்போது இங்கிலாந்தில் மட்டும் எண்பது மில்லியன் சாக்லேட் முட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படுகின்றன. அடுத்த முறை நீங்களை முட்டை சாப்பிடும்போது, இந்த பிரபஞ்சத்தை நினைத்து கொள்வீர்களா?