பிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர் அவரது மனைவியும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இரண்டு மகள்களுடன் ஹைதராபாத் பஞ்ஜாரா ஜில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது வீட்டில் பழைய ரூ 500. 1000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் மேற்க்கொண்ட சோதனையில், ஜீவிதாவின் மேனேஜர் ஸ்ரீ நிவாஸ் கையில் இருந்த பேக்கில் சோதனையிட்டபோது அதில் ரூ.7 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது. இதனால் போலிசார் அவரை கைது செய்தனர்.
இது பற்றி நடிகை ஜீவிதா கூறுகையில், ஸ்ரீ நிவாஸ் பல படங்களை தயாரித்து வருகிறார். எங்கள் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து தான் பணம் கைப்பற்றப்பட்டது போல தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.