1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PG medical course case today judgement

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு - இன்று முக்கிய தீர்ப்பு

supreme
முதுநிலை மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 2021-22 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு 1456 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த காலி இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் இருதரப்பு விசாரணை முடிந்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது 
 
இடங்கள் காலியாக விடப்படுவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும் மாறாக ஊழலை ஊக்குவிக்கும் என்றும் இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?