திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 மே 2018 (17:38 IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உடற்கூறு செய்தாலும், செய்யாவிட்டாலும் பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலை, நெஞ்சை குறிவைத்து சுட்டதாகவும், தனியார் மருத்துவர்களை கொண்டு உடற்கூறு நடந்ததாகவும் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். உடற்கூறு ஆய்வு செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி உடல்களை பதப்படுத்த வேண்டும். 
 
நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.