1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (22:19 IST)

வீடுதேடி வரும் பெட்ரோல்-டீசல்: இதெல்லாம் சாத்தியமா?

மத்திய அரசு ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய புதிய அறிவிப்பாக இனிமேல் பெட்ரோல் டீசல் வாங்க பங்கிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் போதும், வீடு தேடி பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



 
 
ஆனால் டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பாதுகாப்பான பொருளா? டெலிவரி செய்யும் வரையிலும், டெலிவரி செய்த பின்னரும் பெட்ரோல், டீசலை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் இப்போதைக்கு இல்லை. இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த ஜுன் 1 முதல் 'மை பெட்ரோல் பம்ப்' என்ற செயலி மூலம் ஆன்லைனில் வீடு தேடி பெட்ரோல் வழங்கும் நடைமுறை பெங்களுருவில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..