1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (07:53 IST)

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் ரூ.96ஐ தாண்டிய பெட்ரோல் விலை!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி இருக்கும் பொது மக்களுக்கு இது கூடுதல் சுமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைப்பதில் ஆர்வம் காட்டாததால் விலை உயர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகளும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.23 என்ற விலையிலும், ஒரு லிட்டர் டீசல் விலை 90.38 என்ற விலையிலும், விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது