1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (08:44 IST)

பெட்ரோல் ரூ.170, சிலிண்டர் விலை ரூ.1,800.. இலங்கையில் அல்ல, இந்திய மாநிலத்தில் தான்..!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102 என்றும் ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாய் என்று விற்பனையாகி வரும் நிலையில் மணிப்பூரில் மட்டும் மிக அதிக விலைக்கு பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது. 
 
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கலவரம் வெடித்துள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலை வழியாக அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி சொல்லும் லாரிகள் செல்லவில்லை என்பதால் கள்ள மார்க்கெட்டில் பெட்ரோல், டீசல், அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.170 என்றும் சிலிண்டர் ரூ.1800 என்று விற்பனையாகி வருவதாகவும் அரிசி பருப்பு விலை இரு மடங்கு உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கலவரம் காரணமாக கள்ள மார்க்கெட்டில் உள்ளவர்கள் அதிக உள்ள லாபம் சம்பாதித்து வருவதாகவும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva