1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (19:53 IST)

இறந்ததாக கருதப்பட்ட நபர் பிரேத பரிசோதனையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்!

நாக்பூரில் இறந்ததாக கூறிய நபருக்கு பிரேத பரிசோதனையில் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
நாக்பூரில் சிந்த்வாரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹிமான்ஸா பரத்வாஜ். இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
 
இதனால் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதனால் அவரை தனியார் மருத்துவமைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
 
அந்த தனியார் மருத்துவமனையில் ஹிமான்ஸா பரத்வாஜ் மூளை சாவு அடைந்ததாகவும்.அவரது இதயம் மட்டும் துடிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இதய துடிப்பும் நின்றுவிட்டதாக கூறி அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்  பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு இதயம் துடிப்பதும், மூளை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்களிம் தவறான புரிதலால் அந்த நபர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.