வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (17:23 IST)

யார் நல்லவங்க.. கெட்டவங்கன்னு மக்களுக்கு தெரியும்..! – ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

நாட்டிற்கு எதிராக ராகுல்காந்தி பேசி வருவதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. INDIA கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திமுக என பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமான கூட்டணி கட்சிகள் மாநாடும் நடைபெற்றது.

சமீபத்தில் சங்கல்ப் யாத்திரையை நிறைவு செய்து விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, இந்து மதத்தில் ஒரு சக்தி தெய்வமாக வழிபடப்படுவதாகவும், அதேசமயம் இந்தியாவில் இருந்து ஒரு சக்தி துரத்தியடிக்கப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். அதை இந்து மதத்தை இழிவுப்படுத்தும்படி ராகுல்காந்தி பேசுவதாக பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மோடியும் மேடை ஒன்றில் அதை குறிப்பிட்டு கண்டித்து பேசினார்.


இந்நிலையில் ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து நாட்டிற்கு எதிரான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் பரப்பி தவறாக வழிநடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். தங்களை யார் சரியாக வழி நடத்துகிறார்கள்? தவறாக வழி நடத்துகிறார்கள்? என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்” என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Edit by Prasanth.K