ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:30 IST)

ஓசி பயணம் செய்தால் போலீசாருக்கும் அபராதம்: ரயில்வேதுறை எச்சரிக்கை

ஓசிப்பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து வரும் ரயில்வே துறை இனி போலீசார் ஓசியில் பயணம் செய்தாலும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.



 
 
விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் போலீசார் பயணம் செய்வதாக அதிகளவில் புகார் வந்து கொண்டிருப்பது குறித்து ஆலோசனை செய்த தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் போலீசார் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
 
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு காவல்துறையினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.