ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:55 IST)

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று நாடாளுமன்றம் 12வது நாளாக தொடங்கிய நிலையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.