செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (19:27 IST)

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தேதி: அருண்ஜெட்லி அறிவிப்பு

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2019-2020ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை புதிய அரசே தாக்கல் செய்யும்

எனவே நாடாளுமன்றத்தில் அதுவரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

இதற்காக  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். வரும் மே மாதம் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.