1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Parliament
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்  அனைத்து எம்பிக்களும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்தநிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அக்னிபாத் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன தகவல் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் வலியுறுத்த திட்டமிட்டுள்ள நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.