வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (08:02 IST)

பரபரப்பான சூழ்நிலையில் கூடும் பாராளுமன்றம்: 47 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் பரபரப்பான நிலையில் இன்று பாராளுமன்றத்தின் மக்களவை கூறுகிறது இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொள்வதற்காக நேற்று டெல்லி வந்தடைந்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த கூட்டத்தில் 47 மசோத்தாக்கள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராகியுள்ள நிலையில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் இந்திய சீன எல்லைப் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை ஆகியவற்றை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. மேலும் நீட் குறித்த பிரச்சினையை எழுப்ப திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும் என்பதும் இந்த கூட்டத்தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் ராகுல் காந்தியும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது