1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (15:04 IST)

கேரள மாணவருக்கு கொரனா வைரஸ்; சுகாதாரத்துறை ஆலோசனை

கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திவருகிறது.

கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொரனா பாதிக்கப்பட்ட மாணவர் பற்றிய எந்த விவரமும் அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.