அதானி விவகாரம்: தொடர்ந்து 3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதானி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் முடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் மீண்டும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் பல பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மூன்றாவது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியதாக தெரிகிறது. ஒரு பக்கம் பாஜக ராகுல் காந்தி மீது உரிமை பிரச்சினையை பாஜக கொண்டு வர இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் அதானி முழும முறைகேடுகள் கொடுத்து விசாரிக்க வேண்டும் என்று முழங்கி வருகின்றனர் இதனை அடுத்து இன்று இரு அவைகளும் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி குழும முறைகேடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் லண்டனில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் அமளியில் ஈடுபட்டனர் இரு தரப்பும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற வளாகம் தம்பித்துள்ளது.
Edited by Mahendran