ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (10:18 IST)

கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் குண்டுகள்! – பயங்கரவாதிகள் நடமாட்டமா?

கேரள – தமிழக எல்லை அருகே வனப்பகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துபுழாவில் வனப்பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பை கிடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற இரண்டு பேர் அதை எடுத்து பார்த்தபோது அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்திருக்கின்றன. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அவர்கள் அதை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த குண்டுகளை ஆய்வு செய்த ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் கேரளாவிற்குள் எப்படி வந்தது என அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதி தமிழகத்திலிருந்து 60 கி.மீ அருகே உள்ளது. இந்த குண்டுகள் சிக்கிய விவகாரம் பற்றிய விசாரணை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் நக்சல்களுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆயுத சப்ளை நடைபெறுகிறதா என்ற ரீதியிலும் பயங்கரவாத தடுப்புப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.