வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (08:46 IST)

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்! – விரட்டியடித்த இந்தியா!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் இந்தியாவை உளவு பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை இந்தியா நிர்மூலமாக்கி உள்ளது. இந்த நிலையில் ஒரு நாட்டிற்குள் இருக்கும் மற்ற நாட்டு தூதரக அதிகாரிகள் உளவு வேலை பார்ப்பது குற்றமாக கருதப்படுகிறது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் தாஹிர் கான் மற்றும் அபிட் உசைன். இவர்கள் இருவரும் தூதரக அதிகாரிகளாக இருந்துகொண்டு இந்தியாவை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் சொல்லியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர்களை 24 மணி நேரத்திற்கு இந்தியாவை விட்டு வெளியேறும்படி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் இந்தியாவை உளவு பார்த்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.