1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (10:00 IST)

பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்.. கிலோ கணக்கில் ஹெராயினை கைப்பற்றிய பிஎஸ்எஃப் வீரர்கள்..!

பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோனை பிஎஸ்எஃப் வீரர்கள் கைப்பற்றிய நிலையில் அதில் கிலோ கணக்கில் ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் ட்ரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்றதை எல்லை பாதுகாப்பு படைவினர் முறியடித்தனர். நேற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றை இடைமறித்து சுட்டுத் தள்ளிய வீரர்கள் அதில் 565 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் தொடர்ச்சியாக ஹெராயின் கடத்த முயற்சி நடந்து வருகிறது என்பதும் அதை நமது வீரர்கள் முறியடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran