’கீழடி’ஆய்வு முடிவுகள் வெளியீடு :அதிமுக அமைச்சரை பாராட்டிய மு.க. ஸ்டாலின் !
தமிழர்கள் தொன்மையான நாகரிக அடையாளம் உள்ளவர்கள் என்பதற்கான சான்று கீழடியில் கிடைத்த தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான #கீழடி ஆய்வறிக்கையை அரசு வெளியிட்டதை வரவேற்கிறேன்.
இந்திய வராலற்றை, இனி தமிழகத்திலிருந்துதான் பார்க்க வேண்டும் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
தமிழர் நாகரிகம் 'முற்பட்ட நாகரிகம்' என்பதை உணர்த்தும் கீழடியில், அகழ்வாய்விடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தொல்லியல் அலுவலகம் - போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். என தெரிவித்துள்ளார்.
மேலும், கீழடி அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், துறை செயலாளர் உதயசந்திரனுக்கு வாழ்த்துகள். கீழடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சு. வெங்கடேசன் எம்.பிக்கும் திமுக சார்பில் வாழ்த்துகள். கொந்துகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.