இப்போது பிரதமர் செய்ய வேண்டிய முதல் காரியம் இதுதான்: ப.சிதம்பரம் ஆவேசம்
இப்போது பிரதமர் செய்ய வேண்டிய முதல் காரியம், மணிப்பூரில் பைரன் சிங்கின் அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான் என மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆவேசமாக கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஏதோ ஒன்றைத் திறப்பதற்காக சென்ற பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை எனவும் ப சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் மணிப்பூர் பற்றிய சிந்தனை வர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? என்றும், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்தின் கொடூர வீடியோவா அவருக்கு நினைவூட்டியது? என்றும் ப. சிதம்பரம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
Edited by Mahendran